நடிகர் விஜயை தொடர்ந்து வெளிநாட்டு இறக்குமதி காருக்கு நுழைவு வரியை விலக்க தனுஷ் வழக்கு !

நடிகர் விஜய் 2012 ம் ஆண்டு வெளிநாட்டு காரை இறக்குமதி செய்தார்.மேலும் வெளிநாட்டு இறக்குமதி காருக்கு நுழைவு வரி வசூலிக்கத் தடை கோரிய நடிகர் விஜய் தாக்கல் செய்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில்,தற்போது நடிகர் தனுஷும் தனது இறக்குமதி காருக்கு நுழைவு வரி விலக்கு கோரி 2015-ல் தாக்கல் செய்த வழக்கு, நாளை விசாரணைக்கு வருகிறது.

இவர் காருக்கு 60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை நுழைவு வரியாக செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து, தனுஷ் வழக்கை தாக்கல் செய்தார்.நாளை இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என எண்ணப்படுகிறது.