நடிகர் ஆர்யா குறித்த பணமோசடி வழக்கில் அவதூறு பரப்பியோர் மீது நடவடிக்கை !

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகருள் ஒருவர்.சமீபத்தில் வெளிவந்த சர்பட்ட பரம்பரை படத்தில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.இதில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

சமீபத்தில் திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி பண மோசடி செய்ததாக ஆர்யா மீது ஜெர்மனியைச் சேர்ந்த பெண் அளித்ததில் விசாரணை நடந்தது.ஆர்யா சைபர் கிரைம் போலீஸில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இந்த வழக்கில் திருப்பமாக ஆர்யாவின் முகநூல் பயன்படுத்தி ஜெர்மனியில் வசிக்கும் தமிழ் பெண்ணிடம் பணம் மோசடி செய்ததாக சென்னையை சேர்ந்த 2 பேர் இரு தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர்.

மேலும் இவ்வாறு ஆர்யா மீது அவதூறு பரப்பிய நபர்கள் மீது தகுந்த சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகிறோம் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.