தல ரசிகர்கள் உற்சாகம்..பொங்கலுக்கு ரிலீஸாகும் வலிமை !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகருள் ஒருவர் அஜித்.இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது.தற்போது அஜித் நடித்து கொண்டிருக்கும் படம் வலிமை.மேலும் இதன் அப்டேட் வேண்டும் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேட்டு கேட்டு வைரல் ஆக்கினார்.

போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஆக்‌ஷன் படம் வலிமை.படத்தின் முதல் சிங்கிளாக ‘நாங்க வேற மாதிரி’ எனும் பாடல் வெளியிடப்பட்டது.

மேலும் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வரும் என தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.இதனை அறிந்த ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க : நடிகை மியா ஜார்ஜ் தந்தை காலமானார் !