செல்பியால் பறிபோன உயிர்கள் !

இன்றைய காலத்தில் மொபைல் போன் மக்களிடத்தில் முக்கிய இடத்தை வகிக்கிறது.வீட்டில் இருக்கும் போதும் வெளியில் செல்லும் போதும் அனைவரும் புகைப்படம் எடுக்க ஆசைப்படுகின்றனர்.

மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசுவது குறைந்து விட்டது.சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவிடுகின்றனர்.அதிலும் அவர்கள் பதிவிடும் புகைப்படத்திற்கு அதிக லைக்ஸ் வேண்டும் என்று நினைக்கின்றனர்.

இந்த புகைப்படத்தில் அதிக ஆபத்துகள் உள்ளது என்று அவர்கள் மறந்துவிடுகிறர்கள்.மிக உயரத்தில் புகைப்படம் எடுப்பது ஆபத்தான இடடங்களில் புகைப்படம் எடுப்பது என மக்கள் தங்கள் நிலையை மறந்துவிடுகிறார்கள்.

இமாச்சல பிரதேசத்தில் குலு மாவட்டம் பஹாங் என்ற இடத்தில் ஓடும் ஆற்றக்கரையோரம் நின்று அம்மா, மகன் மற்றும் இரு சுற்றுலாப் பயணிகள் என நான்கு பேர் செல்பி எடுத்துள்ளனர்.

அப்போது தவறுதலாக தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். தற்போது இந்த சம்பவம் வைரலாக பரவி வருகிறது.மேலும் ஆபத்துகள் இருக்கும் என தெரிந்தும் மக்கள் இதை செய்வது மிக வேதனையளிக்கிறது.

இதையும் படிங்க : இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் !