Ration card: வீடு மாறி சென்றால் புதிய ரேஷன் கார்டு வாங்க வேண்டிய அவசியமில்லை..!

aadhar-number-is-enough-to-buy-ration-item-not-ration-card
புதிய ரேஷன் கார்டு

Ration card: வீடு மாறி சென்றாலும் ஊர் மாறி சென்றாலும் அல்லது மாநிலமே மாறி சென்றாலும் புதிய ரேஷன் கார்டு வாங்க வேண்டும் என்பது தற்போது நடைமுறையில் இருந்து வரும் நிலையில் இனிமேல் அந்த நிலை தேவை இல்லை என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார் .

இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வீடு மாறி சென்றாலும் ,ஊர் மாறி சென்றாலும் அல்லது மாநிலம் மாறி சென்றாலும் இனிமேல் புதிய ரேஷன் கார்டு வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் பொதுமக்கள் தாங்கள் இடம் மாறி செல்லும் இடத்தில் தங்களது ஆதார் எண்ணை அல்லது ரேஷன் அட்டை எண்ணை மட்டும் கொடுத்து ரேஷன் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Corbevax Vaccine: கோர்பேவேக்ஸ் தடுப்பூசி அரசுக்கு ரூ.145, தனியாருக்கு ரூ.800-க்கு விற்பனை

ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தின் மூலம் இது சாத்தியமாகியுள்ளது என்றும் புதிய வீடு மாறினால் புதிய ரேஷன் கார்டு தேவை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார் .

மேலும் வீடு மாறாவிட்டாலும் கூட ரேஷன் கார்டை கையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் ஆதார் அட்டை எண் மற்றும் பயோமெட்ரிக் மூலம் தங்கள் அடையாளத்தை உறுதி செய்து பொதுமக்கள் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

வீடு மாறி சென்றால் புதிய ரேஷன் கார்டு வாங்க வேண்டிய அவசியமில்லை என்ற மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: New Covid Variant: இஸ்ரேலில் புதிய உருமாறிய கொரோனா கண்டுபிடிப்பு