Rain Update: தமிழகத்தில் கன, அதிகன மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு எச்சரிக்கை
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு எச்சரிக்கை

Rain Update: மார்ச் 20 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில தினங்களுக்கான வானிலை முன் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கான வானிலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

17.03.2022: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்.

18.03.2022: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

19.03.2022, முதல் 21.03.2022 வரை: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்.

17.03.2022,18.03.2022: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

Rain update in Tamil Nadu

இதையும் படிங்க: New Covid Variant: இஸ்ரேலில் புதிய உருமாறிய கொரோனா கண்டுபிடிப்பு