கடந்த ஆகஸ்ட் மாதம் ஆதார் கார்டு பயன்பாடு அதிகரித்தாக மத்திய அரசு தகவல் !

ஆதார் அடையாள அட்டை என்பது 2 இலக்க அடையாள எண் தாங்கிய அட்டை ஆகும்.நமது தனி மனித அடையாளத்தை குறிப்பது.மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் 146 கோடி முறை ஆதார் கார்டு அத்தாட்சியாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் 130 கோடி மக்கள்தொகையை விட அதிகமாக ஆதார் எண் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருவதால் மக்கள் ஆதார் அட்டையை பயன் படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொள்கிறார்கள் என்ற தகவலும் உள்ளது.

கொரோனா தொற்றின் 2 ம் அலை இந்தியாவை வெகுவாக தாக்கியது.மேலும் 3 ம் அலை பெரிதும் பாதிக்கும் என்று எச்சரிக்கையுடன் இந்தியா தீவிரமாக செயல்பட்டு வருகிறது.மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன.

மேலும் ஆதார் தளத்தில், PM-Kisan Nidhi திட்டத்தின் கீழ் சுமார் 10 கோடி விவசாயிகள் 2000 ரூபாய் பெறுவார்கள் . PM உஜ்வாலா யோஜனா மற்றும் PM கரீப் கல்யாண் யோஜனா ஆகியவை ஏழைகளுக்கு இலவச உணவு ஆதாயங்கள் விநியோகிக்கப்படும் ஆதார் பயன்படுத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.