காற்று மாசு ஏற்படுத்தினால் ஒரு கோடி ரூபாய் அபராதம்

டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்தில் கடுமையான விதிகள் விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காற்று மாசை தடுக்க மத்திய அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததையடுத்து, உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

அரசு உத்தரவை மீறி யாராவது காற்று மாசு ஏற்படுத்தினால் இந்த சட்டத்தின்கீழ் ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் அல்லது 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காற்று மாசை தடுப்பதற்காக தனியாக ஒரு வாரியம் அமைக்கவும் அவசர சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.