சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழப்பு

சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழப்பு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வனப்பகுதியையொட்டியுள்ள கிராமங்களில் சிறுத்தைகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. கடந்த திங்கள்கிழமை பகாதியா தீவான் மற்றும் மங்கல்பூர்வா கிராமங்களில் இரண்டு குழந்தைகள் சிறுத்தை தாக்குதலுக்கு உயிரிழந்தனர்.

இந்த நிலையில், கதர்னியாகாட் வனவிலங்கு சரணாலயத்தையொட்டி அமைந்துள்ள மோதிபூர் மலைப்பகுதியில் 12 வயது சிறுமி நேற்று சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காதிகன்பூர்வா கிராமத்தில் வசிக்கும் சிறுமி சோனி, மதிய வேளையில் வயலில் நின்று கொண்டிருந்த போது, ​​காட்டில் இருந்து வெளியேவந்த சிறுத்தை ஒன்று சிறுமியை தாக்கி உள்ளது. அவளது அலறல் சத்தம் கேட்ட கிராம மக்கள் கூச்சலிட்டு சிறுத்தையை விரட்டியதால் அது மீண்டும் காட்டுக்குள் சென்றது. ஆனால், படுகாயம் அடைந்த சிறுமி உயிரிழந்தாள்.

தகவல் அறிந்ததும் காவல்துறை மற்றும் வனத்துறையின் பல குழுக்கள் சம்பவ இடத்திற்கு சென்னை விசாரணை மேற்கொண்டன. சிறுமி சோனியின் குடும்ப உறுப்பினர்களுக்கு சட்டப்படி இழப்பீடு வழங்கப்படும் என்றும், கிராம மக்கள் விழிப்புடன் இருக்கும்படி கூறப்பட்டுள்ளதாக கதர்னியாகாட் வனவிலங்கு சரணாலய வன அலுவலர் ஆகாஷ்தீப் வாத்வான் தெரிவித்துள்ளார்.

சிறுத்தையை பிடிக்க அமைக்கப்பட்டுள்ள தனிப்படையில் தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: weather update: வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இன்று விலக வாய்ப்பு