weather update: வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இன்று விலக வாய்ப்பு

chennai meteorological department
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இன்று விலக வாய்ப்பு

weather update: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று விலக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை கொட்டித் தீர்த்தது. தமிழகம், புதுச்சேரியில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவகாலத்தில் வழக்கமாக 45 செ.மீ.மழை கிடைக்கும். ஆனால், தற்போது 71 செ.மீ. மழை கிடைத்தது. இது வழக்கத்தைவிட 59 சதவீதம் அதிகம். சென்னையில் அதே காலகட்டத்தில் 78 செ.மீ. மழை கிடைக்கும். ஆனால், தற்போது 136 செ.மீ. மழை கிடைத்துள்ளது. இது வழக்கத்தைவிட 74 சதவீதம் அதிகம். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை இன்று விடைபெற உள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் அதை ஒட்டிய கடலோரஆந்திரா, தெற்கு ஆந்திரா, தெற்குஉள் கர்நாடகா, கேரளா பகுதிகளில்இருந்து வடகிழக்கு பருவமழைஜன.22-ம் தேதி (இன்று) விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. இதன் காரணமாக வரும் 25-ம் தேதி வரையிலான 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

இதையும் படிங்க: YouTube channels: 35 யூடியூப் சேனல்களை முடக்கம்..!