மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி- முதலமைச்சர்

2020- 21 கல்வியாண்டில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார்.

தற்போதுள்ள அசாதாரண சூழல் காரணமாக கல்வியாளர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக கல்வி கற்றனர். படத்திட்டங்களையும் அரசு குறைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.