நாகசாகியின் 76 வது நினைவு தினம் இன்று !

ஆகஸ்ட் 9, 1945, அமெரிக்கா தனது அணுகுண்டை ஜப்பான் நாட்டில் நாகசாகி என்னும் இடத்தில் வீசியது.ஹிரோஷிமா வில் முதலாவது அணுகுண்டால் அழிக்கப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, அமெரிக்கா இரண்டாவது அணு குண்டை நாகசாகி மீது வீசியது.

உலகின் முதல் அணுசக்தித் தாக்குதல் 140,000 பேர் கொல்லப்பட்டனர். ஆகஸ்ட் 15 அன்று, ஜப்பான் சரணடைந்தது, இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.

நாகசாகியில் நடந்த ஆரம்ப குண்டுவெடிப்பில் குறைந்தது 70,000 பேர் கொல்லப்பட்டனர், மேலும் சுமார் 70,000 பேர் பின்னர் கதிர்வீச்சு தொடர்பான நோய்களால் இறந்தனர்.

மேலும் சில வரலாற்று தகவல் படி அணுசக்தியால் புற்றுநோய் மற்றும் பிற நீண்ட கால விளைவுகள் ஏற்பட்டதால், ஐந்து வருடத்திற்கு பிறகு சுமார் 200,000 பேர் இறந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.இன்று நாகசக்கியின் 76 வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.