புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

covid cases
கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம்

இந்தியாவை உலுக்கிய கொரோனா இரண்டாம் அலை ஜூலை மாத தொடக்கத்திலிருந்து தணிய ஆரம்பித்தது. தினசரி கொரோனா பாதிப்பானது 40 ஆயிரத்திற்கும் கீழ் சென்றது. ஆனால் அவ்வப்போது 40 ஆயிரத்திற்கு மேல் செல்வதும் இரண்டு நாட்களில் குறைவதுமாகவே இருந்தது. வடகிழக்கு மாநிலங்களிலும் கேரளாவிலும் கொரோனா தொற்று உச்சத்திலேயே இருந்ததே அதற்குக் காரணம்.

அதேபோல தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை குறையாமலேயே இருந்துவந்தது. பெருமளவு குறைந்த சென்னையில் மீண்டும் படிபடியாக உயர்ந்தது.

கடந்த வாரம் இந்தியாவில் பதிவான மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் கேரளாவில் மட்டுமே 51.51% கேஸ்கள் பதிவாகின. தமிழ்நாட்டில் 7, இமாச்சலப் பிரதேசத்தில் ஆறு, கர்நாடகாவில் 5, ஆந்திரா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கத்தில் இருந்து தலா 2, மேகலயா, மிசோரத்தில் தலா 1 மாவட்டங்கள் கவலையளிக்கக் கூடிய மாவட்டங்களாக உள்ளன. இந்த மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை உயர்த்தி கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர மாநில அரசுகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது” என்றார். தமிழ்நாட்டில் கோவை, சென்னை, ஈரோடு, செங்கல்பட்டு, திருவள்ளூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய 7 மாவட்டங்கள் இந்த லிஸ்டில் உள்ளன.