கேரளாவில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்காக கடத்திச் சென்ற தமிழகத்தை சேர்ந்த 6 பேரை கேரள போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 3 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் கைப்பற்றப்பட்டன.
இந்தக் கும்பல் கடந்த பல மாதங்களாக கள்ளநோட்டுகளை கேரளாவுக்கு கடத்தி சென்று புழக்கத்தில் விட்டது விசாரணையில் தெரியவந்தது.
விசாரணைக்கு பின் போலீசார் 6 பேரையும் கட்டப்பனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.




