இன்று வரை கொண்டாடப்படும் காலத்தால் அழியாத தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் !

மக்களின் வாழ்க்கையோடு ஒன்றாக இருப்பது சினிமா.மற்றும் அதில் வரும் நடிகர் நடிகைகள்.சில படங்கள் அழியாத ஓவியமாக என்றும் ரசிகர் மனதில் இடம்பிடித்திருக்கும்.இதில் எவர்க்ரீன் படமாக இருப்பது 1968 ம் ஆண்டு வெளிவந்த தில்லானா மோகனாம்பாள் திரைப்படம்.

இந்த படம் ரிலீசாகி இன்றுடன் 53 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.இதில் நடிகர் நிலகம் சிவாஜி கணேசன்,நடிகை பத்மினி,மனோரமா, நாகேஷ், டி.எஸ்.பாலைய்யா, ஏ.வி.எம்.ராஜன் ஆகியோர் நடிப்பில் உருவானது.

நாதஸ்வர வித்வானான சிவாஜி மற்றும் .பரதநாட்டிய கலைஞராக பத்மினி நடித்துள்ளனர்.இவர்கள் இருவருக்கும் இடையில் உள்ள காதல், மோதல் போன்றவற்றை கூறிய படம் தான் தில்லானா மோகனாம்பாள்.ஏ.பி.நாகராஜன் இந்த படத்தை எழுதி, இயக்கி, தயாரித்திருந்தார். கே.வி.மகாதேவன் இசையமைத்துள்ளார்.

தில்லானா மோகனாம்பாள் படம் 2 தேசிய விருதுகளையும், 5 தமிழக அரசு விருதுகளையும் வென்றுள்ளது.ஈஸ்ட்மேன் கலர்லேப் ஒளிப்பதிவு செய்த இந்த படம் தஞ்சாவூர், திருவாரூர், மதுரை ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டது.

இதில் வரும் சிவாஜி மற்றும் பத்மினி இவர்களது நடிப்பு இன்று வரை அனைவராலும் ரசிக்கப்படுகிறது என்பது பெரும்சிறப்பு.2010 ல் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்ட தில்லானா மோகனாம்பாள் படம் தென்னிந்திய திரைப்பட சங்க தியேட்டரில் திரையிடப்பட்டது.