46 ரயில்களின் சேவை நேரம் மாற்றம்:தெற்கு ரயில்வே !

Railways
பயோ டீசலில் டீசல் லோகோக்களை இயக்க ரயில்வே முடிவு

தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 46 ரயில்களின் சேவை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த செய்திக்குறிப்பில்,பயணிகளின் வசதி, ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் உள்ளிட்டவற்றைக் கருத்தில்கொண்டு ரயில்களின் நேரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, வரும் 17-ம் தேதி முதல் மன்னார்குடி – சென்னை எழும்பூர் ரயில் (06180) நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு இனி இரவு 10.53-க்கு வரும். காரைக்கால் – எர்ணாகுளம் ரயில் (06187) நாகூருக்கு மாலை 4.48 மணிக்கு வரும்.

இதேபோல, புனலூர் – மதுரை (06730), சென்னை எழும்பூர் – கொல்லம் (06101), நாகர்கோவில் – கோயம்புத்தூர் (06321/06322), விழுப்புரம் – மதுரை (02867), நாகர்கோவில் – கோயம்புத்தூர் (02667), சென்னைஎழும்பூர் – புதுச்சேரி (06025/06026) உட்பட மொத்தம் 46 சிறப்பு ரயில்களில் இடைப்பட்ட சில ரயில் நிலையங்களில் புறப்பாடு அல்லதுவருகை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.