அட இது என்னடா கொடுமை..வண்டலூர் பூங்காவில் மேலும் 4 சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு !

கொரோனா தொற்று கடந்த வருடம் முதல் இந்த உலகை ஆட்டி படைத்துவருகிறது.இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தாக்கத்தை தடுக்க ஊரடங்கு தனி தனியே பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் இந்த மாத தொடக்கத்தில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.சிங்கங்களின் மாதிரிகளை மத்தியபிரதேசத்தில் உள்ள ஆய்வகத்திற்கும், இரத்த மாதிரிகளை தமிழ்நாடு கால்நடை பல்கலை கழகத்திற்கும் அனுப்பினர்.

இதில் நீலா என்ற 9 வயதுள்ள பெண் சிங்கம் உயிரிழந்தது. அதனை தொடர்ந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு பத்மநாபன் என்ற 12 வயதுள்ள ஆண் சிங்கம் உயிரிழந்தது.

தற்போது வண்டலூர் உயிரியல் பூங்காவில் மேலும் 4 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.இந்த 4 சிங்கங்களுக்கும் டெல்டா வகை கொரோனா என்பது தெரியவந்துள்ளது.