வரதட்சணை கொடுமையால் மேலும் ஒரு பெண் பலி

திருவனந்தபுரத்தில் 24 வயதான இளம் பெண் ஒருவர் வரதட்சணைக் கொடுமைக்கு பலியாகியுள்ளார்.

திருவனந்தபுரத்தில் உள்ள விஷின்ஜத்தில் அர்ச்சனா என்ற 24 வயது பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அர்ச்சனாவை அவரது கணவர் சுரேஷ் தற்கொலைக்கு தூண்டியதாக அர்ச்சனாவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

அர்ச்சனாவுக்கும் சுரேஷுக்கும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனால் திருமணமான சில மாதங்களுக்குப் பிறகு, சுரேஷின் தந்தை வரதட்சணையாக ரூ .3 லட்சம் கேட்டார். அந்த தொகை சுரேஷின் சகோதரனுக்காக் கேட்டு வாங்கப்பட்டது.

பின்னரும் சுரேஷ் குடும்பத்தினர் பணம் கேட்டு உள்ளனர், ஆனால் அர்ச்சனாவின் தந்தை இல்லை என்று கூறி விட்டார். இதனால் சுரேஷுக்கும் அவரது மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையில் பிரச்சினைகளுக்கு வழிவகுத்தது. இதை தொடர்ந்து சுரேஷ் அர்ச்சனாவுடன் வாடகை வீட்டுக்கு சென்றார். அப்போதிருந்து, கணவன், மனைவி இருவர் மட்டுமே அங்கு வசித்து வந்தனர்.

ஜூன் 21 அன்று இரவு 11.30 மணியளவில் அர்ச்சனா இறந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது. திங்களன்று அர்ச்சனாவை அழைத்துச் செல்ல சுரேஷ் வந்திருந்தார், அந்த நேரத்தில் அவருடன் டீசல் கேனும் இருந்தது. அர்ச்சனாவின் தந்தை அசோகன் தனது மகள் கொல்லப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார், ஆனால் எறும்புகளைக் கொல்ல டீசலை வாங்கியதாக சுரேஷ் கூறியுள்ளார்.

அசோகன் தனது மகளை சுரேஷ் குடிபோதையில் அடித்து துன்புறுத்தியதாக கூறி உள்ளார். இதை தொடர்ந்து சுரேஷ் கைது செய்யப்பட்டு உள்ளார்.