வைரலாகும் 2,500 ஆண்டுகள் பழமையான எகிப்தின் ‘மம்மி’ !!!

எகிப்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மம்மி சவப்பெட்டி ஒன்றை திறந்த வீடியோ இணையங்களில் வைரலாகி வருகிறது.

எகிப்தின் சுற்றுலா மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி அமைச்சகம் சக்யுரா என்ற இடத்திலிருந்து 59 மர சவப்பெட்டிகளை தொல்பொருள் ஆராய்ச்சிக்காக எடுத்துள்ளது.அந்தப் பகுதியில், போதகர்கள், உயர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் தலைவர்களின் உடல்களை வைத்திருக்கின்றனர்.

இந்நிலையில் 2500 வருடங்களுக்கு மேல் பழைமையான ஒரு சவப்பெட்டியை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பார்வையாளர்கள் முன்னிலையில் திறந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.அந்த பெட்டிக்குள் பிரத்யேகமாக உடல் அடக்கம் செய்வதற்கு தயாரிக்கப்பட்ட துணிகளில் சுற்றப்பட்ட மம்மியின் சடலம் ஒன்று இருப்பது பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

சக்யுரா பகுதியில் முதலில் ஒரு சவக்குழியிலிருந்து 13 சவப்பெட்டிகளை எடுத்ததாகவும், பிறகு மற்றொரு குழியிலிருந்து 14 பெட்டிகளை் என மொத்தம் 59 பெட்டிகளை ஆராய்ச்சிக்காக எடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here