பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை – புதுவை !

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.வங்கக் கடலில் நிலவும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும், நாளை மறுநாளும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

தற்போது வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் கனமழைபெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுவை கல்வியமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், “தொடர் மழையால் நாளையும், நாளை மறுநாளும் (8,9ம் தேதிகளுக்கு) 9 முதல் 12ம் வகுப்புகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்படுகிறது.