பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை:ஐஜி விஜயகுமார் !

காஷ்மீரில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டதில் தொடர்புடைய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஒன்பது நாட்களில் ஒன்பது என்கவுன்ட்டர்களில் 13 பயங்கரவாதிகள் யூனியன் பிரதேசத்தில் கொல்லப்பட்டனர் என ஐஜி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் முதல் வாரத்தில் ஜம்மு -காஷ்மீரில் நடந்த நான்கு பொதுமக்கள் படுகொலைகளுக்கு காரணமான நான்கு பயங்கரவாதிகள் இந்த ஒன்பது என்கவுன்ட்டர்களில் கொல்லப்பட்டதாக காவல்துறை கூறியுள்ளது.

இது குறித்து ஜம்மு – காஷ்மீரின் ஐஜி விஜயகுமார் கூறுவது,காஷ்மீரில் பொதுமக்கள் படுகொலையுடன் தொடர்புடைய 13 பயங்கரவாதிகள், 9 என்கவுண்டர்களில் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புல்வாமா, ஸ்ரீநகர் மற்றும் பாம்போரில் நடந்த மூன்று என்கவுன்ட்டர்களில் மொத்தம் நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதையும் படிங்க : 51 வது கேரள அரசின் திரைப்பட விருதுகள் !