13 சிறப்பு ரயில்கள் இயக்கம் – தெற்கு ரயில்வே !

சென்னை எழும்பூர் – மதுரை உட்பட பல்வேறு இடங்களுக்கு 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதுகுறித்து , தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுவது,மதுரையில் இருந்து ஏப்.17-ம்தேதி முதல் வியாழன், சனிக்கிழமைகளில் இரவு 8.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06158) மறுநாள் காலை 6.55 மணிக்கு சென்னை எழும்பூர் வரும். மறுமார்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து ஏப்.18-ம் தேதி முதல் வெள்ளி, ஞாயிறுகளில் இரவு 10.05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06157) மறுநாள் காலை 8.10 மணிக்கு மதுரை செல்லும்.

கோயம்புத்தூரில் இருந்து ஏப்.16-ம் தேதி முதல் வாரந்தோறும் வெள்ளி இரவு 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (02682) மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரும். மறுமார்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்.17-ம் தேதி முதல் சனிக்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (02681) மறுநாள் காலை 6.30 மணிக்கு கோயம்புத்தூர் செல்லும்.

தாம்பரம் – நாகர்கோவில் அந்த்யோதயா சிறப்பு ரயில்கள் (06191/06192) ஏப்.26-ம் தேதி முதல் இயக்கப்படுகின்றன.சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்.10-ம் தேதி செவ்வாய் தவிர மற்ற நாட்களில் காலை 7.10 மணிக்கு புறப்படும் சதாப்திசிறப்பு ரயில் (06029) அதேநாள் மதியம் 2.15 மணிக்கு கோயம்புத்தூர் செல்லும்.

மறுமார்க்கமாக கோயம்புத்தூரில் இருந்து ஏப்.10-ம்தேதி முதல் மாலை 3.05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06030) அதேநாளில் இரவு 10.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்லும்.

சென்னை சென்ட்ரல் – நிஜாமுதீன் (06151/06152), பெங்களூரு – கோயம்புத்தூர் (06153), மதுரை – நிஜாமுதீன்(06155/06156), புதுச்சேரி – கன்னியாகுமரி (06861/06862), புதுச்சேரி – மங்களூரு (06855/06856) உட்படபல்வேறு இடங்களுக்கு மொத்தம்13 சிறப்பு ரயில்கள் இயக்கப்படஉள்ளன. இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கும்.