முதல் பெண் துணை அதிபராக பதவியேற்றார் கமலா ஹாரிஸ்

ஜனவரி 20-ம் தேதி நேற்று அமெரிக்காவின் மரபுப்படி நண்பகல் 12 மணிக்கு முன்னதாக தேசிய கீதம் ஒலித்த பின்னர் கமலா ஹாரிஸ் துணை அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

அவருக்கு அந்நாட்டு உச்சநீதிமன்ற நீதிபதி சோனியா சோடோமேயர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

வலது கையை உயர்த்தியும் இடது கையை பைபிள் மீது வைத்தும் பதவியேற்றுக்கொண்டார் ஜோ பிடன். அமெரிக்காவின் அரசியல் சாசனங்களை மதித்து செயல்படுவேன் என்பதை பதவிப்பிரமாணத்தின் போது உறுதியளித்தார் கமலா ஹாரிஸ்.