புதிய வன விலங்கு பூங்கா – குஜராத் !

குஜராத் மாநிலம் ஜம்நகரில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மேம்பாட்டில் பெரிய வன விலங்கு பூங்கா விரைவில் அமையவுள்ளதாக, அம்மாநில முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலர் எம்.கே.தாஸ் தெரிவித்துள்ளார்.உலகின் மிகப்பெரிய சிலை குஜராத்தில் அமைக்கப்பட்டது போல், விரைவில் உலகின் மிகப்பெரிய வன விலங்கு பூங்காவும் ஜம்நகரில் அமைக்கப்படவுள்ளது. இங்கு பல இனத்தைச் சேர்ந்த விலங்குகள், பறவைகள் இடம்பெறும்” என்றார்.

அந்த அறிக்கையில்,ஆப்பிரிக்கா சிங்கம், சிறுத்தை, சிறுத்தை புலி, இந்திய நரி, ஆசிய சிங்கம், வங்காள புலிகள், கொரில்லா, ஒட்டகச் சிவிங்கி, ஆப்பிரிக்க யானைகள், உடும்பு, தேன் கரடி, ஒராங்குட்டான் குரங்குகள், லெமூர், நீர் யானை, மீன்பிடிப் பூனை, தும்பி பன்றி உள்ளிட்ட உயிரினங்கள் பூங்காவில் இடம் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.