கரோனா அச்சம்: ஓடிடி தளங்களில் வெளியான தமிழ்ப் படங்கள்!

க/பெ. ரணசிங்கம், சைலன்ஸ் என இரு தமிழ்ப் படங்கள் ஓடிடி தளங்களில் நேற்று வெளியாகியுள்ளன.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் திரையரங்குகளில் படங்களைப் பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு இல்லை. கரோனாவால் திரைப்படத் துறையில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழலில், சினிமாவின் மாற்றுத் தளமாக ‘ஓடிடி’ அமைந்திருக்கிறது. வீட்டுக்குள் இருந்து தொலைக்காட்சி, இணையம் வழியாக படங்களைப் பார்த்து வருகிறார்கள் சினிமா ரசிகர்கள். இதனால் நெட்பிளிக்ஸ், அமேஸான் பிரைம் போன்ற ஓடிடி தளங்கள் அதிகம் பலனடைந்துள்ளன.

அதனால் சைலன்ஸ், க/பெ. ரணசிங்கம் படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேற்று நேரடியாக வெளியாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.