ஓசூர் அருகே பாஜக பிரமுகர் ஓட ஓட விரட்டி படுகொலை

ஓசூர் அருகே பாஜக பிரமுகர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள குந்துமாரணபள்ளி கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாத் என்பவருக்கும் போர்த்தந்திரம் கிராமத்தைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரங்கநாத் நேற்றிரவு தனது மகனின் பிறந்தநாளை கொண்டாடிய போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் அவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.