முருகக் கடவுள் என்னை காப்பாற்றிவிட்டார்- குஷ்பு

வேல் யாத்திரைக்குச் சென்று கொண்டிருந்த நடிகை குஷ்புவின் கார் விபத்துக்குள்ளானது.

இதில் நடிகை குஷ்பு உயிர் தப்பினார். இவ்விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள குஷ்பு, “நான் நலமுடன் இருக்கிறேன். முருகக் கடவுள் என்னை காப்பாற்றிவிட்டார். என் கணவரின் நம்பிக்கை வீண்போகவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.