மறைந்த நண்பரின் கிளினிக்கை திறந்துவைத்த நடிகர் சந்தானம்!

மறைந்த மருத்துவர் சேதுராமனின் ஜி (ZI ) கிளினிக்கின் ஈசிஆர் கிளையை அவரது நெருங்கிய நண்பரும் நடிகருமான சந்தானம் திறந்துவைத்தார்.

இந்த மருத்துவமனை இன்று(அக்.30) முதல் செயல்பட தொடங்குகிறது. நிகழ்ச்சியில் பேசிய உமா சேதுராமன், “ஈசிஆரி-ல் ஜி கிளினிக்கின் கிளையைத் திறக்க வேண்டும் என்பது எனது கணவர் சேதுராமனின் கனவுத் திட்டம். அவருடைய பிறந்தநாளில் இதை நனவாக்கியதில் மிகப்பெரிய மகிழ்ச்சி.

நோயாளிகளை அணுகுவதிலும், அவர்களுக்கு சிகிச்சையளிப்பதிலும் சேதுராமன் கொண்டிருந்த தொலைநோக்குப் பார்வையையும் கனிவையும் சற்றும் குறையாமல் சிகிச்சை அளிக்கும்வகையில் இந்த புதிய கிளையும் செயல்படும்” என நெகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.