காலாண்டில் ரூ.1,195 கோடி இழப்பைச் சந்தித்த இண்டிகோ!

இண்டிகோவின் தாய் நிறுவனமான இன்டர் குளோப் ஏவியேஷன், ஜூலை-செப்டம்பர் காலாண்டில் ரூ .1,194.8 கோடி நிகர இழப்பை பதிவு செய்துள்ளது. இது கடந்த இதே காலாண்டில் ரூ .1,062 கோடி இழப்பை விட அதிகமாகும்.

கரோனா தொற்றால் விமானங்களின் பயணம் தடைப்பட்டதால், இண்டிகோவின் தாய் நிறுவனமான இன்டர் குளோப் ஏவியேஷன் ஜூலை – செப்டம்பர் காலாண்டில் ரூ. 1,194.8 கோடி நிகர இழப்பை பதிவு செய்துள்ளது.

இது 2019ஆம் ஆண்டின் இதே காலாண்டில் ரூ. 1,062 கோடி இழப்புடன் ஒப்பிடுகையில் அதிக இழப்பாகும். “நாங்கள் 100 விழுக்காடு பயணிகள் சேவை தொடங்கியவுடன், அனைத்து விதமான சவால்களையும் எதிர்கொள்வோம். திறனை மேம்படுத்தி லாபத்தை ஈட்டுவோம். பயணிகள் சேவையில் எந்த குறைபாடும் வராமல் பார்த்துக் கொள்வோம்,” என்று இண்டிகோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை முதல் செப்டம்பர் மாத காலாண்டில், பயணிகள் நுழைவுச் சீட்டின் மூலம் ரூ. 2,208.2 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாகவும், இது கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 45.5 விழுக்காடு குறைவு என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.