Today Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (மார்ச் 7, 2023)

சுபகிருது ஆண்டு மாசி மாதம் 23ம் தேதி செவ்வாய்க்கிழமை (Today Rasi Palan) 7.3.2023. சந்திர பகவான் சிம்ம ராசியில் பயணம் மேற்கொள்கிறார். இரவு 7.14 மணி வரை பௌர்ணமி. பின்பு பிரதமை. அதிகாலை 1.15 மணி வரை மகம். பின்னர் பூரம். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.

மேஷம்: புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளாவிட்டால் கை பொருளை இழப்பீர்கள். தேவையில்லாத பிரச்சனையில் தலையிட்டால் வீண் தொல்லைகளில் மாட்டிக் கொள்வீர்கள். மனைவி மக்களின் ஆதரவால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

ரிஷபம்: மாணவர்கள் படிப்பில் மிகுந்த அக்கறை செலுத்துவீர்கள். காதலியின் தகப்பனாருக்கு மருத்துவச் செலவு செய்வீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பை பெறுவீர்கள். மனை, நிலங்கள் வாங்கி விற்கும் வாய்ப்பு வந்து வருமானத்தை பெருக்குவீர்கள்.

மிதுனம்: வியாபாரத்தில் இருந்த சிக்கல்களை தீர்ப்பீர்கள். எதிர்பார்த்த பணம் தடையில்லாமல் கிடைக்கும். கோபித்துக் கொண்டு தாய் வீடு போன மனைவியை சமாதானம் செய்து அழைத்து வருவீர்கள். வியாபாரத்திற்கான வெளியூர்ப் பயணத்தில் வெற்றி பெறுவீர்கள்.

கடகம்: எடுத்த காரியங்களில் இடையூறைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள். ஆன்லைன் வர்த்தகங்களில் அதிகம் ஆசைப்படாதீர்கள். சூதாட்டம் போன்ற விளையாட்டுகளில் ஈடுபட வேண்டாம். அதனால் பண விரையம் ஏற்பட்டு கடன் வாங்க கஷ்டப்படுவீர்கள்.

சிம்மம்: கண்காது பிரச்சனைகள் ஏற்பட்டு மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக் கொள்வீர்கள். காதலியின் கருத்துக்கு இணங்கி நடப்பீர்கள். செல்போனில் அதிக நேரம் கண்விழித்து கேம் விளையாட கூடாது என்று பிள்ளைகளை கண்டிப்பீர்கள்.

கன்னி: உங்களுக்கு வயது குறைந்தவரிடம் எச்சரிக்கையாகப் பேச மறக்காதீர்கள். பணத்தட்டுப்பாடு காரணமாக அடுத்தவரிடம் கையேந்தும் கட்டாயத்திற்கு உள்ளாவீர்கள். நண்பர்களின் மனதைப் புரிந்து நடந்து கொள்வீர்கள்.

துலாம்: கட்டுமானத் தொழிலில் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். போட்டி பந்தயங்கள் லாட்டரிகள் உங்களுக்குச் சாதகமாக அமையும். ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபடாதீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவால் அரசு ஊழியர்கள் அனுகூலம் அடைவீர்கள்.

விருச்சிகம்: கூட்டாகத் தொழில் செய்வதற்கான முயற்சிகளில் இறங்குவீர்கள். எதிர்காலம் கருதி வங்கியில் பணத்தைச் சேமிப்பீர்கள். உங்கள் மீது அக்கறை கொண்ட பெரியோர்களின் ஆதரவால் நல்ல காரியங்கள் நடத்துவீர்கள்.

தனுசு: கடுமையாக வேலை செய்தாலும் மேலதிகாரிகள் கண்டு கொள்ள மாட்டார்கள். கொடுக்கல் வாங்கலில் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். தேவையில்லாத பகையை இழுத்துக் கொள்ளாதீர்கள். வயிற்றுக் கோளாறால் அவதிப்படுவீர்கள்.

மகரம்: அடுத்தவர்களுக்காக உங்கள் பணத்தைச் செலவு செய்து அவதிப்படாதீர்கள். விதண்டாவாதம் பேசி உறவினரிடம் கெட்டபெயர் எடுக்காதீர்கள். வெளிக் கோபங்களை குடும்பத்தில் காட்டாதீர்கள். சந்திராஷ்டம நாள். கவனம் தேவை.

கும்பம்: இயலாதவர்களுக்கு உதவி செய்து பெரியோர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். கமிஷன் வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் மூலமாக புதிய ஆர்டர்களைப் பெறுவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் நல்ல முடிவு கிடைத்து மிகவும் சந்தோஷப்படுவீர்கள்.

மீனம்: விருந்தினர் வருகையால் வீட்டை கலகலப்பாக மாற்றுவீர்கள். பொருளாதாரத்தில் எதிர்பாராத முன்னேற்றத்தை அடைவீர்கள். வீட்டில் சின்னச் சின்னச் சங்கடங்கள் தோன்றினாலும் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள்.