Today Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (26.01.2023)

சுபகிருது ஆண்டு தை மாதம் 12ம் தேதி (Today Rasi Palan) வியாழக்கிழமை 26.1.2023 சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் மேற்கொள்கிறார். இன்று மாலை 5.11 மணி வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி. அதிகாலை 2.13 மணி வரை பூரட்டாதி. பின்னர் உத்திரட்டாதி. மகம், பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடன் இருக்க வேண்டும்.

மேஷம்: தேவையின்றி விவகாரங்களை வளர்க்காதீர்கள். இதனால் வில்லங்கத்தில் மாட்டிக் கொள்ள நேரிடும். உயரதிகாரிகளின் இடையூறால் மன வேதனைப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெற மாட்டீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு குறையாமல் இருக்க சில வேலைகள் செய்வீர்கள்.

ரிஷபம்: வியாபாரத்தில் புதிய யுக்திகளை செயல்படுத்துவீர்கள். பொறுப்பாக வேலை செய்து வேலை செய்யும் இடத்தில் மரியாதையை பெறுவீர்கள். தொடங்கவேண்டிய தொழிலுக்குத் தேவையான ஆயத்த வேலைகளை செய்வீர்கள். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலையை கொண்டு வருவீர்கள்.

மிதுனம்: நடைபாதை வியாபாரிகள் நல்ல லாபத்தை அடைவீர்கள். உத்தியோகம் பார்ப்பவர்கள் உற்சாகமாக வேலை பார்ப்பீர்கள். காதலிக்கு புதிய ஸ்கூட்டி வாங்கி பரிசளிப்பீர்கள். எதிர்பாராத பண வரவால் வங்கி கடன்களை செலுத்துவீர்கள்.

கடகம்: தொழில் செய்யும் இடத்தில் சிறிய விபத்து நேரிடும். சொன்ன நேரத்தில் வேலையை முடிக்க முடியாமல் திணறுவீர்கள். ஜீரணம் ஆகாமல் வயிற்றுப்போக்கால் அவதிப்படுவீர்கள். குழந்தைகளின் கல்விக்காக இரண்டு மடங்கு செலவு ஏற்படும். வண்டி வாகனங்கள் பழுதாகி சிரமப்படுவீர்கள்.

சிம்மம்: சிக்கலை ஏற்படுத்தும் வேலைகளை வீம்புக்காகச் செய்யாதீர்கள். இதனால் தேவையின்றி பிரச்சனைகளைச் சந்திப்பீர்கள். வெளியூர்ப் பயணங்களை ஒத்தி போடுவீர்கள். பணியிடத்தில் கவனமாக வேலை செய்யுங்கள். நகைச்சுவையாகப் பேசுகிறோம் என்று சொல்லி பகையை வளர்க்காதீர்கள்.

கன்னி: நல்ல செய்தியால் குடும்பத்தில் குதூகலத்தை ஏற்படுத்துவீர்கள். தொழில் துறைகளில் எதிர்பாராத வரவு உண்டாகி மகிழ்ச்சி அடைவீர்கள். சுப நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாடுகள் நடத்துவீர்கள். வெளியூர்ப் பயணங்களால் நன்மை அடைவீர்கள். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.

துலாம்: விலை உயர்ந்த பொருட்களை வாங்கி குடும்பத்தினரை சந்தோஷப்படுத்துவீர்கள். காதலியின் கருத்து அறிந்து அதன்படி நடந்து கொள்வீர்கள். பழைய கடன்களை அடைக்கப் பாடுபடுவீர்கள். பணி செய்யும் இடத்தில் முதலாளியிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள்.

விருச்சிகம்: பணிச்சுமையால் பாதிக்கப்படுவீர்கள். கூட இருந்தே சிலர் குழி பறிக்க முயற்சியை செய்வார்கள். தொழிலுக்காக நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். திருமண காரியங்களால் வீடு களைகட்டும். காரியத் தடை ஏற்பட்டாலும் இறுதியில் தாண்டி வருவீர்கள்.

தனுசு: வீடு கட்ட மனை இடம் வாங்குவீர்கள். பணப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் சாதனை புரிவீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவு செய்வீர்கள். செலவு செய்து செல்வாக்கை அதிகரிப்பீர்கள்.

மகரம்: சகோதர சகோதரிகளின் உதவியால் சந்தோசம் அடைவீர்கள். தாமதமான அரசாங்க வேலைகள் சாதகமான நிலைக்கு வரும். கேட்ட இடத்தில் பணத்தை தாராளமாகக் பெறுவீர்கள். வித்தியாசமான முறையில் வியாபாரத்தில் துணிச்சலாக இறங்குவீர்கள்.

கும்பம்: உயரதிகாரிகள் கொடுக்கும் உற்சாகத்தால் கடுமையாக வேலை செய்வீர்கள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து குடும்பத்தினரை மகிழ்ச்சிப்படுத்துவீர்கள். வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்ட பிரச்சனையை எளிதாக தீர்ப்பீர்கள். தாய்வழி உறவுகளால் மன நிம்மதி அடைவீர்கள்.

மீனம்: சூட்சுமங்களை கையாண்டு வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். மேலதிகாரிகளின் அன்பான உதவியை பெறுவீர்கள். வாகனங்கள் பழுதாகி செலவு செய்வீர்கள். மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுப்பீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் செல்வாக்கு உயரும்.