Theni Tops in Aadhaar Linking: மின் இணைப்புடன் ஆதார் இணைப்பில் எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?

தேனி: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மின் இணைப்புடனும் (Theni Tops in Aadhaar Linking) ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இதற்கான பணிகள் நடந்து வருகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அது மட்டுமின்றி தங்களது செல்போன் மூலமாகவும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் 100 சதவீதம் ஆதார் மின் இணைப்பு பணிகள் முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தேனி பகிர்மான வட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.