Today Rasi Palan:இன்றைய ராசி பலன்கள் (20.01.2023)

சென்னை: சுபகிருது ஆண்டு தை மாதம் 6ம் தேதி (Today Rasi Palan) வெள்ளிக்கிழமை. சந்திர பகவான் தனுசு ராசியில் பயணம் மேற்கொள்கிறார். காலை 7.53 மணி வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி. காலை 11.05 மணி வரை மூலம். பின்னர் பூராடம். ரோகிணி, மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.

மேஷம்: புதிய பொறுப்புகள் உங்களுக்கு கிடைக்கும். குழப்பமும் சந்தேகமும் இல்லாமல் திட்டமிட்டு செயல்படுவீர்கள். மறைமுகமாக மட்டம் தட்ட நினைப்பவர்களுக்கு நல்ல பாடம் புகட்டுவீர்கள். பணி நிமித்தமாக வெளிநாடு செல்வீர்கள்.

ரிஷபம்: எதையும் குறுக்கு வழியில் அடைய வேண்டும் என்று நினைக்காதீர்கள். நியாயம் உங்கள் பக்கம் இருந்தாலும் நிதானமாக செயல்பட வேண்டும். பங்குச்சந்தை வியாபாரத்தில் பாதகம் அடைவீர்கள்.

மிதுனம்: இளம் வயதினர் தன்னிச்சையாக முடிவு எடுக்காதீர்கள். இல்லத்தில் மகிழ்ச்சி நிலவி சங்கடங்கள் மறைந்து தன்னம்பிக்கையுடன் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். தொழிலுக்கு வேண்டிய உதவிகள் பெறுவீர்கள்.

கடகம்: சுபகாரியத் தடைகள் நீங்கி சொந்தங்களை வரவழைப்பீர்கள். ரத்த உறவுகள் இடையே உங்கள் செல்வாக்கை அதிகரிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்ப்புகளை சந்திப்பீர்கள். தொழில் போட்டிகளை வெற்றிகரமாக முறியடிப்பீர்கள்.

சிம்மம்: பிள்ளைகளின் படிப்பில் அக்கறை செலுத்துவீர்கள். பிறரின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டாம். ஆன்லைன் வர்த்தகத்தில் அளவோடு ஈடுபடுவீர்கள். போட்டி பந்தயங்களில் இருந்து விலகி இருங்கள். பிறரை நம்பி காரியம் செய்யாதீர்கள்.

கன்னி: உண்மையான நண்பர்களால் உதவி பெறுவீர்கள். வெளியூர்ப் பயணங்கள் தொழிலுக்குச் சாதகம் அடைவீர்கள். அரசுத்துறை ஊழியர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். பண வரவுகளை சீர்படுத்துவீர்கள்.

துலாம்: திட்டமிட்டு நேரம் தவறாமல் செயல்படுவீகள். பணத்தைக் கையாளும் போது கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். காதலியின் அரவணைப்பால் களிப்படைவீர்கள்.

விருச்சிகம்: வார்த்தை வசியத்தால் மரியாதையை கூட்டுவீர்கள். செல்வாக்கை அதிகரிக்க செய்வீர்கள். மனைவியின் குதிகால் வலிக்கு தீர்வு ஏற்பட்டதால் மகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலுக்குத் தேவையான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள்.

தனுசு: தொழில் வரியை முறையாக செலுத்தி விடுங்கள். வேலை செய்யும் இடங்களில் வீண் விவாதங்கள் செய்யாதீர்கள். வியாபாரம் மந்தமாக நடப்பதால் மனக்கவலை அடைவீர்கள். குடும்பத்தினர் உங்களை புரிந்து கொள்ளாமல் நடப்பதால் மனச்சஞ்சலம் அடைவீர்கள்.

மகரம்: கொடுத்த கடனை திருப்பிக் கேட்டால் பகைக்கு ஆளாவீர்கள். நண்பர்களிடம் வாங்கிய கடனை செலுத்தி நாணயமாக நடந்து கொள்ளுங்கள். வேலை செய்யும் இடத்தில் விழுந்து சிறிய காயமடைவீர்கள். உறவினர்களின் ஏச்சுப் பேச்சுக்கு ஆளாவீர்கள்.

கும்பம்: ஆடை ஆபரணங்கள் வாங்கி பெண்களை மகிழ்ச்சிப்படுத்துவீர்கள். படிப்பிற்காக பிள்ளைகளை வெளிநாடு அனுப்ப ஏற்பாடு செய்வீர்கள். பங்குச் சந்தை முதலீடுகளில் லாபத்தை அடைவீர்கள். வியாபாரத்திற்காக கேட்ட பணத்தை பெறுவீர்கள்.

மீனம்: உறவுகளைப் பலப்படுத்த உற்சாகமாகப் பேசுவீர்கள். சகோதர சகோதரிகளுக்கு பக்கபலமாக இருப்பீர்கள். வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்துவீர்கள். வெளியூர்ப் பயணங்களின் மூலம் தொழிலுக்குத் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள்.