Today Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (11.01.2023)

சென்னை: சுபகிருது ஆண்டு மார்கழி மாதம் 27ம் தேதி (Today Rasi Palan) புதன்கிழமை. சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் மேற்கொள்கிறார். பிற்பகல் 12.51 மணி வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி. காலை 10.38 மணி வரை மகம். பின்னர் பூரம். திருவோணம், அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.

மேஷம்: புதிய நட்புகளால் குடும்பத்தில் பிரச்சனையை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. காதலியால் மன நிம்மதியை இழப்பீர்கள். மின்சார வேலைகளை இன்று வீட்டில் பார்க்கலாம். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று காரியம் செய்யாதீர்கள்.

ரிஷபம்: தொழிலில் ஏற்பட்ட எதிர்ப்புகளை தூள், தூளாக்குவீர்கள். கமிஷன் வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும். புதிய வீட்டில் குடியேறுவீர்கள். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் இல்லத்தில் சந்தோஷத்தை ஏற்படுத்துவீர்கள்.

மிதுனம்: வியாபாரத்தில் சின்ன சின்ன இடையூறுகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சலில் சிக்க நேரிடும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தியை கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்து மரியாதையை அதிகரிப்பீர்கள். சகோதர வகையில் பண உதவி செய்வீர்கள்.

கடகம்: பிரிந்து போன குடும்பங்களை ஒன்று இணைப்பீர்கள். பிள்ளைகளின் கல்வி திறனால் சந்தோசம் கிடைக்கும். வீடு பூமி மனை போன்றவற்றில் முதலீடு செய்வீர்கள். அரசு ஊழியர்கள் அற்புதமான பலனைப் பெறுவீர்கள். வியாபாரத்திற்காக பொருத்தமான இடத்திற்கு மாறுவீர்கள்.

சிம்மம்: தொழில் துறைகளில் நிதானம் காட்டுவீர்கள். கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த நன்மை அடைய மாட்டீர்கள். அரசு ஊழியர்கள் நிதானத்தை இழக்க வேண்டாம். ஒப்பந்த வேலைக்கான பணத்தைப் பெற சிரமப்படுவீர்கள். நியாயத்துக்குப் புறம்பாக நடக்காதீர்கள்.

கன்னி: கணவன், மனைவி இடையே நீடித்த சங்கடங்களை சந்தோசமாக பேசி தீர்த்துக் கொள்வீர்கள். செய்த முதலீட்டில் உடனே வருமானம் வரும் என்று எதிர்பார்க்க வேண்டாம். உறவினர் மத்தியில் உங்கள் செல்வாக்கு குறையும்.

துலாம்: மற்றவர்களுக்கு உதவி செய்வதில் மும்முரமாக இருக்காதீர்கள். அதுவே உங்களுக்கு சிக்கலை உண்டாக்கும். பண வரவு அதிகமாக இருப்பதால் கடனை அடைத்து நிம்மதி அடைவீர்கள். கவர்ச்சியாக பேசி காதலியின் மனதை வெல்வீர்கள்.

விருச்சிகம்: உடல்நிலையில் இருந்த பாதிப்பை மருத்துவ சிகிச்சை மூலம் சரி செய்வீர்கள். மார்க்கெட்டிங் தொழிலில் ஏற்படும் அலைச்சல் உண்டாகும். உடல் நலத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும்.

தனுசு: உங்களின் புத்திசாலித்தனத்தால் வருமானம் உயரும். பணத்தின் மீது இருந்த மதிப்பை இப்போது உணர்ந்து கொள்வீர்கள். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற முயற்சி செய்வீர்கள். இடுப்பு வலி மூட்டு வலி ஆகியவற்றால் பாதிப்பு அடைவீர்கள்.

மகரம்: வருமானத்திற்காக இடம் மாறி செல்வீர்கள். அனுசரித்து நடந்து கொண்டு மனைவியை மகிழ்ச்சிப்படுத்துவீர்கள். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்துப் போடாதீர்கள். வெளியூர் பயணங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சந்திராஷ்டம நாள்.

கும்பம்: மங்கல நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். குலதெய்வ வழிபாட்டால் உடல் கோளாறுகளை சரிப்படுத்துவீர்கள். அரசுப் வேலையில் செல்வாக்கை உயர்த்துவீர்கள். பயணங்களில் கவனமாகவும் நிதானமாகவும் செயல்படுவீர்கள்.

மீனம்: வியாபாரத்தில் இருந்த சிக்கல்களை அகற்றுவீர்கள். சிறு வியாபாரிகள் நல்ல லாபம் அடைவீர்கள். பெட்டிக்கடை வைத்திருப்பவர்கள் கணிசமான பலன் பெறுவீர்கள். ஒர்க் ஷாப், எலக்ட்ரீசியன், கொத்தனாருக்கு தொடர்ந்து வேலை கிடைத்து புதிய ஒப்பந்தங்கள் போடுவீர்கள்.