Golden Globe Award For RRR: ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு கிடைத்த கோல்டன் குளோப் விருது

அமெரிக்கா: ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான திரைப்படம் (Golden Globe Award For RRR) ஆர்ஆர்ஆர். இந்த படம் கடந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வசூலை அள்ளியது.
இந்தியாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான இத்திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், ஆர்ஆர்ஆர் திரைப்படம் கோல்டன் குளோப் விருது நாமினேஷன் பட்டியலில் இரண்டுப் பிரிவுகளில் இடம் பிடித்தது. திரைத்துறையினர் உயரிய விருதாக கருதும் ஆஸ்கர் விருதுக்கு அடுத்த இடத்தில் கோல்டன் குளோப் விருது உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது. எம்.எம்.கீரவாணி இசையமைத்த நாட்டு நாட்டு பாடலுக்கு விருது கிடைத்துள்ளது. மேலும் ஆஸ்கார் விருது நாமினேஷனிலும் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று (ஜனவரி 10) நடைபெற்ற விழாவில் இயக்குனர் ராஜமவுலி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டு விருதினை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.