சுபகிருது ஆண்டு மார்கழி மாதம் 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை (Today Rasi Palan) 1.1.2023. சந்திர பகவான் இன்று மேஷ ராசியில் பயணம் மேற்கொள்கிறார். இன்று இரவு 11.19 வரை தசமி. பின்னர் ஏகாதசி. இன்று மாலை 5.12 மணி வரை அஸ்வினி. உத்திரம், அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். எனவே சற்று நிதானம், பொறுமையுடன் இருப்பது அவசியம்.
மேஷம்: தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக அமையும். எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளிப்பீர்கள். உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும்.
ரிஷபம்: சோர்வுகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்புண்டு. எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.
மிதுனம்: குடும்பத்தினரின் ஆதரவு உற்சாகம் தரும். அவர்களால் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். புதிய முயற்சி அனுகூலமாகும். வீட்டில் அன்பும் அந்நியோன்யமும் அதிகரிக்கும்.
கடகம்: எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும் என்றாலும் சாதகமாக முடியும். சிலருக்கு நண்பர்களின் சந்திப்பு எதிர்பாராத ஆதாயம் கொடுக்கும். புதிய முயற்சியைக் காலையிலேயே தொடங்குவது நல்லது.
சிம்மம்: புதிய முயற்சி சாதகமாகும். எதிர்பார்த்த காரியம், வீண் அலைச்சலையும் செலவுகளையும் கொடுத்தாலும், சாதகமாகிவிடும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
கன்னி: சொல்லிலும் செயலிலும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். கடன் வாங்குவதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை.
துலாம்: எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்புண்டு. சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். உறவினர்களுக்காகச் செலவு செய்ய வேண்டி வரும். இறை வழிபாடுகளில் கலந்து கொள்வீர்கள்.
விருச்சிகம்: சிலருக்கு அவ்வப்போது மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த பணம் வந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். இறைவழிபாடு முக்கியம்.
தனுசு: மனதில் உற்சாகமும், செயல்களில் பரபரப்பும் காணப்படும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் யோசனையை அனைவரும் ஏற்றுக்கொள்வார்.
மகரம்: புதிய முயற்சி சாதகமாக முடியும். காரிய அனுகூலம் உண்டாகும். முயற்சிகளுக்குச் சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தினர் ஆரோக்கியம் மேம்படும்.
கும்பம்: மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். மன உறுதியுடன் செயல்படுவீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.
மீனம்: மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். துணிச்சலாகச் செயல்படுவீர்கள். புதிய முயற்சி சாதகமாகும். சிலருக்கு எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.



