Tiruvannamalai Girivalam: திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவல உகந்த நேரம் அறிவிப்பு

திருவண்ணாமலை: The temple administration has announced the best time to visit Tiruvannamalai for Purnami Grivalam. திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் குறித்து கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மலையே மகேசன்” என போற்றப்படும் திருவண்ணாமலையில் பௌர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபடுகின்றனர்.

நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையையே சிவனாக எண்ணி பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபடுவார்கள்.

திருவண்ணாமலை கோயில். சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாக காட்சித்தரும் தலமாகவும் திகழ்கிறது. 14 கிலோ மீட்டர் சுற்றுப் பாதையை கொண்ட மலையை பௌர்ணமி நாட்களில் கிரிவலம் வந்து பக்தர்கள் வழிபடுவது வழக்கம். தமிழகம் மட்டுமன்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் கிரிவலம் வந்து செல்வர்.

இந்த நிலையில் இந்த மாதம் பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை (சனிக்கிழமை) இரவு 10.41 மணிக்கு தொடங்கி மறுநாள் 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12.48 மணிக்கு நிறைவடைகின்றது. இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.