Traffic change in Coimbatore: கோவையில் போக்குவரத்து மாற்றம்

கோயம்புத்தூர்: The Metropolitan Transport Department has informed that the traffic has been changed in Coimbatore Ukkadam – Athupalam. கோவை உக்கடம் – ஆத்துப்பாலத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை, உக்கடம், ஆத்துப்பாலத்தில், மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, கோவை மாநகர போக்குவரத்து காவல் பிரிவின் சோதனை முயற்சியாக, கோட்டப் பொறியாளர் சாலை பாதுகாப்பு, மனுநீதி மற்றும் அந்த பிரிவை சார்ந்த அலுவலர்களுடன் இணைந்து, நேற்று 02.02.2023-ம் தேதி மாலை 4.00 மணிமுதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி, பாலக்காடு ரோட்டிலிருந்து, ஆத்துப்பாலம் வழியாக, கோவை மாநகருக்குள், உக்கடம் நோக்கி வரும், கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள், முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி, ரோட்டிலிருந்து கோவை மாநகருக்குள், வரும் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர இலகுரக வாகனங்கள், ஆத்துப்பாலத்திலிருந்து உக்கடம் நோக்கி, வலதுபுறம் திரும்ப தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாகன ஓட்டிகள், நேராக சுமார் 500 மீட்டர் தொலைவில், U-turn செய்து, இடதுபுறமாக திரும்பி, உக்கடம் நோக்கி, தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம்.

பாலக்காடு ரோடு வழியாக, கோவை மாநகருக்குள், வரும் கனரக வாகனங்கள், மற்றும் சரக்கு வாகனங்கள், கோவைப்புதூர் பிரிவில், இடதுபுறமாக திரும்பியும் அல்லது சுண்ணாம்பு காளவாய் சந்திப்பு, புட்டுவிக்கி சாலையில் இடதுபுறமாக திரும்பி, சுண்டக்காமுத்தூர் ரோடு வழியாக, தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம்.

பொள்ளாச்சி சாலையிலிருந்து, கோவை மாநகருக்குள், வரும் கனரக வாகனங்கள், சுந்தராபுரம் சந்திப்பில், வலதுபுறமாக திரும்பி, போத்தனூர், நஞ்சுண்டாபுரம், ராமநாதபுரம் ரோடு வழியாக, கோவை மாநகருக்குள் செல்லலாம்.

அதேபோல், கோவையிலிருந்து பொள்ளாச்சிக்கு, செல்லும் இருசக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாகன ஓட்டிகள், ஆத்துப்பாலம் வழியாக, வழக்கம்போல், எந்தவித தடையுமின்றி, தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம்.

இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு, பொது மக்கள் தங்களது ஒத்துழைப்பை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.