Tirupati temple : சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி கோவில் நாளை சுமார் 12 மணி நேரம் மூடப்படும்

திருப்பதி: Tirupati temple will be closed for around 12 hours tomorrow in view of solar eclipse : சூரிய கிரகணம் நிகழ உள்ளதால் நாளை காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

சூரியன், நிலவு, பூமி மூன்றும் ஒரே நோ்க்கோட்டில் வரும் போது கிரகணங்கள் நிகழ்கின்றன. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் (A solar eclipse is when the moon’s shadow covers the sun) எனவும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் சராசரியாக 4 கிரகணங்கள் வரை நிகழும். அதன்படி சூரியனை முழுமையாக நிலவு மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் எனவும், ஒரு பகுதியை மட்டும் மறைத்தால் பகுதி சூரிய கிரகணம் எனவும் குறிப்பிடப்படுகிறது.

அந்தவகையில் தீபாவளி பண்டிக்கைக்கு மறு நாளான அக்டோபா் 25-ஆம் தேதி பகுதி சூரிய கிரகணம் நிகழ உள்ளது. சூரிய கிரகணத்தை தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (அக்.25) மாலை 5.14 மணிக்கு காணலாம் என அறிவியல் மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இந்த நிலையில நாளை சூரிய கிரகணம் நடைபெற உள்ளதால் காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடப்படும் (Tirupati Eyumalayan Temple will be closed for 12 hours) என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.இதனைத் தொடர்ந்து நவம்பர் 8 ஆம் தேதி சந்திர கிரகணம் காரணமாக திருப்பதி கோயில் சுமார் 10.40 மணி நேரம் மூடப்படும்.

சூரிய கிரகணம் அக்டோபர் 25 ஆம் தேதி மாலை 5.11 முதல் மாலை 6.27 மணிக்குள் நிகழ உள்லது. நவம்பர் 8 ஆம் தேதி சந்திர கிரகணம் (Lunar eclipse on 8th November) பிற்பகல் 2.39 மணிக்கு தொடங்கி, 6.19 மணிக்கு முடிவடையும்.இரண்டு சந்தர்ப்பங்களிலும் கோவில் மூடப்பட்டிருக்கும் மற்றும் சுத்தி, புண்யவாச்சனம் மற்றும் பிற சடங்குகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்படும். சூர்ய கிராணத்தையொட்டி அக்டோபர் 25 ஆம் தேதியன்று கோயில் காலை 8.11 மணிக்கு மூடப்பட்டு இரவு 7.30 மணிக்கு மீண்டும் திறக்கப்படும். நவம்பர் 8 ஆம் தேதி சந்திர கிராணத்தை மீண்டும் காலை 8.40 மணிக்கு மூடப்பட்டு இரவு 7.20 மணிக்கு மீண்டும் திறக்கப்படும்.

இரு கிராணங்களின் போது இரு வேளைகளிலும் நடைபெறும் விஐபி, ஸ்ரீவாணி, ரூ. 300 சிறப்பு நுழைவு தரிசனம், தினசரி சடங்குகள் மற்றும் பிற சிறப்பு தரிசனம் ஆகியவற்றை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. இரண்டு நாட்களும் சர்வ தரிசனத்தை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்த திருப்பதி தேவஸ்தானம், சூரிய மற்றும் சந்திர கிரகணத்தின் போது நித்யா அன்னதான வளாகத்தில் உணவு வழங்கப்படமாட்டாது (No food will be served in the Nitya Annadana premises during solar and lunar eclipses) என்று தெளிவுபடுத்தியுள்ளது.