Rajinikanth wishes: சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்திற்கு வெளியே காந்திருந்த ரசிகர்களுக்கு ரஜினி நேரில் தீபாவளி வாழ்த்து

ரஜினிகாந்த் தனது இல்லத்திற்கு வந்த ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்ததால், அவரது ரசிகர்கள் அதிக மகிழ்ச்சி அடைந்து தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்

சென்னை: Rajinikanth wishes his fans a Happy Diwali : சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்திற்கு வெளியே காந்திருந்த ரசிகர்களுக்கு ரஜினி நேரில் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது (The festival of Diwali is being celebrated today across the country). அதிகாலை முதலே மக்கள் புத்தாடை அணிந்தும், இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் தீபாவளி பண்டிகையை வெகுவிமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் தீபாவளியையொட்டி ரஜினிகாந்தைக் காண அவரது ரசிகர்கள் சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு கூடி இருந்தனர் (Rajinikanth’s fans gathered in front of his residence in Boise Garden, Chennai to catch a glimpse of him on Diwali). இதனை அறிந்த ரஜினி தனது இல்லத்தில் இருந்து வெளியே வந்தும் கேட் அருகே நின்று அங்கு கூடியிருந்த ரசிகர்களுக்கு கையசைத்து தீபவாளி வாழ்த்து தெரிவித்தார்.

ரஜினி தரப்பில் இனிப்புகளும் வழங்கப்பட்டன (Sweets were also served on Rajini’s side). இதனால் மகிழ்ச்சியடைந்த ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்தனர். ரஜினிகாந்த், தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெய்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் தனது இல்லத்திற்கு வந்த ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்ததால், அவரது ரசிகர்கள் அதிக மகிழ்ச்சி அடைந்து தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.