Vaikunta Ekadasi Festival: திருப்பதி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்கள் சொர்க்கவாசல் திறப்பு

திருப்பதி: ஆந்திர மாநிலம், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருகின்ற ஜனவரி மாதம் 2ம் தேதி வைகுண்ட ஏகாதசியை (Vaikunta Ekadasi Festival) முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்படுவதாக தேவஸ்தானம் சார்பில் கூறப்பட்டுள்ளது. அதன்படி 10 நாட்கள் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதற்காக வருகின்ற ஜனவரி 2ம் தேதி முதல் 11ம் தேதி வரை ரூ.300 முதல் ரூ.25,000 வரையில் கட்டணத்தில் ஆன்லைன் தரிசன டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக மொத்தம் 2.50 லட்சம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. தேவைப்படுபவர்கள் ஆன்லைன் வாயிலாக வாங்கிக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. திருப்பதி திருமலை கோயிலில் மிகவும் பிரமாண்டமான முறையில் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக வருகின்ற 27ம் தேதி கோயிலை சுத்தம் செய்யும் ஆழ்வார் திருமஞ்சனம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

மேலும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மூலவர் மீது பட்டு துணியால் மூடப்படும். கருவறை, ஆனந்த நிலையம், சம்பங்கி மண்டபம், யோக நரசிம்ம சாமி, வகுலமாதா, பாஷ்யகாரல உட்ட அனைத்து இடங்களும் இதற்காக தூய்மைப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

முந்தைய செய்தியை பார்க்க:Seeman strongly condemned To TN Govt: தமிழர் பண்டிகைக்கு இலவச அரிசி தருவது தேசிய இன அவமானம்: சீமான் கடும் கண்டனம்

முந்தைய செய்தியை பார்க்க:No Special Class: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது: பள்ளிக்கல்வித்துறை அதிரடி