Palani Thaipusam Festival: பழனியில் இன்று தைப்பூசத் தேரோட்டம்

பழனி: The Thaipusath Chariot will be held this evening at the Four Chariot Road in Palani Chariot. பழனி தேரடியில் உள்ள நான்கு ரத வீதியில் தைப்பூசத் தேரோட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.

முருகனின் அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனியில் கடந்த 29ஆம் தேதி தைப்பூசத் திருவிழா தொடங்கியது. பழனி ஊர் கோவில் என்று அழைக்கப்படும் பெரிய நாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.

நில்வான திருக்கல்யாணம் மற்றும் வெள்ளித் தேரோட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் இன்று மாலை 4.30 மணி அளவில் பழனி தேரடியில் உள்ள நான்கு ரத வீதியில் தைப்பூ சத் தேரோட்டம் நடைபெற உள்ளது. தைப்பூசத் திருவிழாவினை ஒட்டி தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதையாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.

ஒருவழிப்பாதையாக மாற்றம்:

பாதயாத்திரை பக்தர்கள் பழனி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் கோவிலுக்கு மேலே சென்று ஐந்து சாமி தரிசனம் செய்யவும், தவிர்க்கும் விதமாக குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக மேலே சென்று,, படிப்பாதை வழியாக கீழே இறங்கும் வகையில் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

சிறப்பு பேருந்துகள்:

பழனியில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு விரைந்து ஊர் திரும்பும் வகையில் 500க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கோவை, மதுரை, திருச்சி, தேனி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் 4 வழிச்சாலையில் மாற்றி விடப்பட்டு, பழனி -தாராபுரம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்திற்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போலீஸ் பாதுகாப்பு:

பழனி நகர் முழுவதும் பக்தர்கள் வசதிக்காக குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் பாதுகாப்பு கருதி திண்டுக்கல், தேனி, மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி,விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 3000த்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வரும் பிப்ரவரி 7ம்தேதி இரவு தெப்பத்தேர் பவனியும், அன்று இரவு கொடியிறக்கத்துடன்‌ தைப்பூசத்திருவிழா நிறைவடைகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகமும், பழனி நகராட்சியும் செய்து வருகிறது.