Explosion at Sabarimala Ayyappan temple: சபரிமலை ஐயப்பன் கோவிலில் வெடி விபத்து; 3 பேர் காயம்

சபரிமலை: 3 people were injured in a sudden explosion at the Sabarimala Ayyappan temple. சபரிமலை ஐயப்பன் கோவிலில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டதில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜை விழா தொடங்கி நடந்து வருகிறது. பூஜைக்காக கடந்த 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சபரிமலைக்கு பக்தர்கள் குறைந்த அளவே சென்று வந்தனர். மேலும் குறிப்பிட்ட அளவே கடந்த ஆண்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் கடந்த 5 ஆண்டுகளுக்குப்பின் பக்தர்கள் கூட்டம் தற்போது நிரம்பி வழிகிறது. பெரும் வெள்ளம், இளம் பெண்களின் வருகை மற்றும் கோவிட் காரணமாக 5 ஆண்டுகளாக பக்தர்களின் வருகை மிகவும் குறைவாக இருந்தது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கி கொள்ளப்பட்டதால் கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் தினமும் வருகிறார்கள்.

இந்த நிலையில், சபரிமலையில் வெடி வழிபாடு செய்வதற்கான வெடிமருந்து நிரப்பும் மையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மாளிகைபுரம் அருகே வெடி வழிபாட்டுக்கான வெடி மருந்து நிரப்பும் மையம் உள்ளது. இதில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் வெடிமருந்து நிரப்புநும் இடத்தில் பணிபுரிந்த ராஜேஷ், அமல், ஜெயக்குமார் ஆகியோர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்களை பாதுகாப்பு போலீசார் மீட்டு சன்னிதானத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காயமடைந்தவர்களில் ஒருவருக்கு 60 சதவீத தீக்காயமும், இருவருக்கு 40 சதவீத தீக்காயமும் ஏற்பட்டதாக மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடி வழிபாட்டுக்கு பக்தர்கள் அதிகம் கூடும் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெடி விபத்து குறித்து தேவசம் போர்டு அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளார்.