Gayathri Raguramm quits party: பாஜகவிலிருந்து காயத்ரி ரகுராம் விலகல்

சென்னை:Suspended Tamil Nadu BJP leader Gayathri Raguramm quits party, cites lack of respect for women. பாஜகவில் பெண்களை மதிக்கவில்லை என்றும், சம வாய்ப்பு வழங்கவில்லை என்றும் குற்றம்சாட்டி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக பிற மாநில மற்றும் வெளிநாட்டுத் தமிழ் வளர்ச்சிப் பிரிவு முன்னாள் தலைவருமான காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் கே.அண்ணாமலை, காயத்ரியை கட்சியில் அவர் வகித்த அனைத்துப் பதவிகளில் இருந்தும் 6 மாத காலத்திற்கு சஸ்பெண்ட் செய்தார். கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்சி தொடர்பான எந்த விஷயங்களுக்கும் தன்னுடன் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். தொடர்ந்து கட்சி ஒழுக்கத்தை மீறி கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதாக காயத்திரி மீது கட்சியின் தலைவர் குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில், கட்சியில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் இன்று தொடர் ட்வீட்களை வெளியிட்டார். அதில், “இந்து தர்மத்தை என் இதயத்திலும் மனசாட்சியிலும் நான் உறுதியாக நம்புகிறேன். அதை அரசியல் கட்சியில் தேட வேண்டிய அவசியமில்லை, கடவுளையும் தர்மத்தையும் தேடி கோயிலுக்குச் செல்வேன். கடவுள் எங்கும் இருக்கிறார். கடவுள் என்னுடன் இருக்கிறார்.” தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதியாகும்” என்று அவர் ட்வீட் ஒன்றில் கூறியுள்ளார்.