Annavaram Sathya Devar Temple: ஆந்திர பிரதேசம் காக்கிநாடா மாவட்டம் அன்னாவரம் சத்யதேவர் கோயில்

இந்த கோயிலின் மூலவர் சத்யதேவர், தாயார் சத்யதேவி. இந்த கோயில் சுமார் 2 ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனக் கூறப்படுகிறது.

ஆந்திரா: Andhra Pradesh Kakinada District Annavaram Satyadevar Temple :கடவுள் குடியிருக்கும் இடம் கோயில். இதன் அடையாளம் கோபுரம். அதை கண்ணுக்கு எட்டிய தூரத்தில் நின்று வழிபட்டாலும் புண்ணியமே. இதனால் எல்லா சன்னதிகளையும் தரிசித்த பலன் கிடைக்கும். இதை ’கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்பர். இதற்கு காக்கிநாடா அன்னாவரம் கோயில் ஒரு உதாரணமாக விளங்குகிறது. இந்த கோயிலின் மூலவர் சத்யதேவர், தாயார் சத்யதேவி. இந்த கோயில் சுமார் 2 ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனக் கூறப்படுகிறது.

வைகாசி வளர்பிறை தசமியில் திருக்கல்யாணம், ஆவணி வளர்பிறை துவிதியையில் ஜயந்தி உத்ஸவமும், நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி ஆகியவையும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.

கருவறையில் மிகவும் புதுமையான தோற்றத்தில் அடியில் பிரம்மாவாகவும், நடுவில் சிவனாகவும், உச்சியில் விஷ்ணுவாகவும் காட்சியளிக்கும் சத்யதேவர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி போல் அழகிய மீசையுடன் தோற்றமளிக்கிறார். இடதுபுறம் சத்யதேவியும், வலதுபுறம் லிங்க ரூபமாக பாணத்தில் முக அமைப்புடன் கூடிய கவசத்துடன் கயிலாசநாதரும் இருப்பது இத்தலத்தின் தனி சிறப்பு.

சித்ரா பவுர்ணமி அல்லது ஆவணி மாத பவுர்ணமியில் சத்யநாராயண விரத பூஜையும் விரதமும் மேற்கொள்வதென்பது தொன்றுதொட்டு நடைபெறுகிற ஒரு வழிபாடாகும். ஆந்திர மாநில இந்துக் குடும்பங்களில் சத்யநாராயண பூஜை (Satyanarayana Puja) , ஒரு கட்டாயச் சடங்காகவே உள்ளது.

திருமணமான அந்த ஆண்டே அன்னாவரத்தில் எழுந்தருளியிருக்கும் வீர வெங்கட சத்யநாராயண சுவாமியைத் தரிசித்து, புதுமணத் தம்பதிகள் கோயில் வளாகத்திலேயே சத்யநாராயண பூஜையைச் செய்து விரதமும் அனுசரிக்க வேண்டும். அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் தங்கள் இல்லங்களில் பூஜையைச் செய்யலாம். காக்கும் கடவுளான மஹாவிஷ்ணுவும், அழிக்கும் கடவுளான சிவபெருமானும், படைக்கும் கடவுளான பிரம்மாவும் ஒரே உருவாக ஸ்தாணுமாலயனாக சுசீந்திரத்தில் காட்சி தருகிறார்கள்.

லிங்க ரூபமாக கயிலைநாதனும், சத்யதேவராக மகாவிஷ்ணுவும், அனந்த லட்சுமியாக மகாலட்சுமியும், கருவறையில் ஒரே பீடத்தில் காட்சிதரும் அற்புத ஆலயமாக அன்னாவரம் திருக்கோயில் திகழ்கிறது. கோயில், ஒரு பெரிய தேர் போன்ற அமைப்புடன் விளங்குகிறது. நான்குபுறமும் அழகான பெரிய சக்கரங்கள். நுழைந்ததும் உயர்ந்த கொடிமரம், அருகில் பெரிய தூண், அதில் கருவறையில் உள்ளதைப் போலவே அர்ச்சாவதாரங்கள் வடிக்கப்பட்டுள்ளன. உயரமான கருவறையாதலால், மூலவர் தரிசனம் வெகு தூரத்திலிருந்தும் தெரிகிறது.

தமிழ்நாட்டு பாணியில் கோபுரம் (Gopuram in Tamilnadu style). கோயிலின் முன்பகுதியில் பெரியதொரு கல்யாண மண்டபம். இது நவீன கட்டடக்கலை அமைப்புடன் விளங்குகிறது. ராமருக்கும் வன துர்கைக்கும் தனிச் சன்னதிகள். பிராகாரத்தைச் சுற்றி வரும்போது சத்யநாராயண விரதம் செய்யும் சிறுசிறு ஹோம குண்டங்கள் நிறையக் காணப்படுகின்றன. சுமார் 1,500 பக்தர்கள் ஒரே நேரத்தில் விரதம் மேற்கொள்ள முடியும்.

தமிழ்நாட்டில் கலச பூஜையாகச் செய்யப்படும் இந்த பூஜையை, இந்தக் கோயிலில் ஹோமத்துடன் சேர்த்துச் செய்கிறார்கள். நிறைய தம்பதிகள் சத்யநாராயண விரதம் மேற்கொள்கிறார்கள். தம்பதிகள் நேரில் வந்து கலந்துகொள்ள முடியாவிட்டால், பூஜைக்குரிய கட்டணத்தை அனுப்பி வைத்தால், அர்ச்சகர்களே பூஜை செய்து பிரசாதமும் அனுப்பி விடுகிறார்கள். விரத பூஜை செய்யும் இடத்தை சாணத்தால் மெழுகி, பின் சுத்தமான புதுத் துணியை விரித்து நான்கு மூலையிலும் மஞ்சள் குங்குமம் வைத்து அலங்கரிக்கிறார்கள். பின்னர் அரிசியைப் பரப்பி, வெள்ளி அல்லது மண் கலசத்தில் மாவிலை அல்லது வெற்றிலை வைத்து, அதன்மேல் ஒரு புதுத் துணியில் சத்யநாராயண சுவாமியின் (Satyanarayana Swamy) பிரதிமையை வைத்து, சுவாமியை அந்தப் பிரதிமையில் ஆவாஹனம் செய்கிறார்கள். விநாயகர், லட்சுமி, பார்வதி, சிவபெருமான், நவக்கிரகங்கள், அஷ்டதிக் பாலர்கள் ஆகியோருக்கும் பூஜைகள் நடத்தப்பட்டு, சத்யதேவருக்கு அபிஷேக ஆராதனைகள் தொடர்கின்றன.

பழம், பசும்பால், ரவை அல்லது கோதுமை ரவை, வெல்லம் சேர்த்து தயாரிக்கப்பட்ட கேசரி நைவேத்யம் செய்யப்படுகிறது. பூஜை நிறைவில் சத்யநாராயண விரதம் தொடர்பான கதைகளும் விரதப் பலன்களும் பாராயணம் செய்யப்படுகின்றன. பூஜையில் கலந்து கொண்டவர்களாகட்டும், கலந்துகொள்ளாமல் பார்த்தவர்களாகட்டும்… அனைவருமே சுவாமி பிரசாதத்தை அலட்சியம் செய்யாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது இந்த பூஜை முறையில் மிக முக்கியமான ஒன்றாகும்.

அனைவருக்குமே தன் அருள் பரிபூரணமாகச் சென்றடைய விரும்புகிறார் சத்யதேவர். கோயிலில், விரத பூஜை காலை 6 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெறுகிறது. ஆந்திராவில் சத்யநாராயண விரதம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு தம்பதியும் தனது வீட்டில் இதைக் கட்டாயம் செய்ய வேண்டும்.

கருவறையில் மிகவும் புதுமையான அர்ச்சாவதார மூர்த்திகள். சிலாரூபம் சுமார் 10 அடி இருக்கும். அடியில் பிரம்மாவாகவும், நடுவில் சிவனாகவும், உச்சியில் விஷ்ணுவாகவும் காட்சியளிக்கும் சத்யதேவர் என்ற சத்யநாராயண மூர்த்தி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி போல் (Like Tiruvallikeni Parthasarathy) அழகிய மீசையுடன் தோற்றமளிக்கிறார். தன வீரம், தயா வீரம், தர்ம வீரம், யுத்த வீரம் ஆகியவை அடங்கிய வீர ரச ஸ்வரூபமாக விளங்குகிறார் பெருமாள். இடதுபுறம் அனந்தலக்ஷ்மி எனப்படும் மதநாந்த லக்ஷ்மி சத்யதேவி. வலதுபுறம் லிங்க ரூபமாக பாணத்தில் முக அமைப்புடன் கூடிய கவசத்துடன் கயிலாசநாதர். உத்ஸவ காலங்களில் தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டுக் காட்சி தருகின்றனர்.

இரண்டு தளங்களாக அமைந்துள்ள இந்தத் திருக்கோயிலின் அடித்தளத்தில் மத்திரிபாத் விபூதி வைகுண்ட மஹா நாராயண யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இது தன ஜன ஆகர்ஷன யந்திரம். செல்வமும், ஆள் பலமும் கூடிவரும் யந்திரம். அதன்மேல் விஷ்ணு பஞ்சாயுத யந்திரம். இந்த பீடத்தின் மேல்தான் அடுத்த தளத்தில் சத்யதேவர் அருள்பாலிக்கிறார். அடித்தளத்தில் யந்திரத்துக்கு நாற்புறமும் விநாயகர், சூரியநாராயணர், பால திரிபுரி சுந்தரி மற்றும் மகேஸ்வரர் சன்னதிகள். அருகில் ராமர் சன்னதி. தானாக உருவான இந்த அர்ச்சாவதாரத்தைக் கண்டறிந்தவர் ஸ்ரீராமர்தான் (It is Sri Rama) என்கிறது தல புராணம்.

இந்தப் புகழ்பெற்ற கோயில் ரத்னகிரி மலையின் அடிவாரத்தில் உள்ளது. மேருவின் மகனான ரத்னாகர் தவமிருந்து தன் இடத்தில் இந்தக் கோயிலை அமைத்தார் என்று தல புராணம் கூறுகிறது. ரத்னகிரி மலை (Ratnagiri Hill), கடல் மட்டத்திலிருந்து 300 அடி உயரத்தில் உள்ளது. இங்குள்ள பணக்காரர்கள் எப்போதும் அன்னதானம் அளித்துக்கொண்டே இருப்பதால் இவ்வூர் அன்னாவரம் என்ற பெயர் பெற்றது. இதற்கு மற்றொரு காரணமும் உண்டு. இங்குள்ள சத்யதேவர், கேட்கும் வரத்தை (அனின வரதம்) தருவதால் இவ்வாறு அழைக்கின்றனர்.

கருவறையில் மிகவும் புதுமையான தோற்றத்தில் அடியில் பிரம்மாவாகவும், நடுவில் சிவனாகவும், உச்சியில் விஷ்ணுவாகவும் காட்சியளிக்கும் சத்யதேவர் (Satyadeva depicted as Brahma at the bottom, Shiva in the middle and Vishnu at the top) திருவல்லிக்கேணி பார்த்தசாரதி போல் அழகிய மீசையுடன் தோற்றமளிக்கிறார். இடதுபுறம் சத்யதேவியும், வலதுபுறம் லிங்க ரூபமாக பாணத்தில் முக அமைப்புடன் கூடிய கவசத்துடன் கயிலாசநாதரும் இருப்பது இத்தலத்தின் தனி சிறப்பு.