Realme Narzo 50: ரியல்மி நார்சோ 50 5ஜி சீரிஸ் இந்தியாவில் அறிமுகம்

Realme Narzo 50
ரியல்மி நார்சோ 50 5ஜி சீரிஸ் இந்தியாவில் அறிமுகம்

Realme Narzo 50: ரியல்மி நிறுவனத்தின் நார்சோ 50 5ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றில் ரியல்மி நார்சோ 50 5ஜி மற்றும் நார்சோ 50 ப்ரோ 5ஜி என இரு மாடல்கள் அடங்கும்.

அம்சங்களை பொருத்தவரை ரியல்மி நார்சோ 50 5ஜி மாடலில் 6.6 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 810 5ஜி பிராசஸர், 4GB+ 64GB, 4GB+ 128GB மெமரி மற்றும் 6GB+ 128GB மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 48MP பிரைமரி கேமரா, பிளாக் அண்ட் வைட் போர்டிரெயிட் லென்ஸ் மற்றும் 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 33W டார்ட் சார்ஜ் தொழில்நுட்பம் கொண்டுள்ளது.

யல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி மாடலில் 6.4 இன்ச் சூப்பர் AMOLED+ டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 920 5ஜி பிராசஸர், 6GB+ 128GB மெமரி மற்றும் 8GB+ 128GB மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. புகைப்படங்களை எடுக்க இந்த ஸ்மார்ட்போனில் 48MP பிரைமரி கேமரா, 8MP லென்ஸ், 4CM மேக்ரோ லென்ஸ் மற்றும் 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 33W டார்ட் சார்ஜ் தொழில்நுட்பம் கொண்டுள்ளது.

விலை விவரங்கள்:

இந்தியாவில் ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி 6GB+128GB மாடல் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என்றும் 8GB+128GB மாடல் விலை ரூ. 21 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நார்சோ 50 5ஜி 4GB+64GB மாடல் விலை ரூ. 13 ஆயிரத்து 999 என்றும் 4GB+128GB மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என்றும் 6GB+128GB மாடல் விலை ரூ. 15 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: குஜராத்தில் உப்பு தொழிற்சாலையில் சுவர் இடிந்து 12 பேர் உயிரிழப்பு