CM Basavaraj bommai : தில்லிக்கு சென்ற உலகத் தலைவர்கள் தற்போது பெங்களூருக்கு நேரடியாக வருகின்றனர்: முதல்வர் பொம்மை

பெங்களூரு : World leaders who went to Delhi are now coming directly to Bangalore :தில்லிக்கு சென்ற உலகத் தலைவர்கள் தற்போது பெங்களூருக்கு நேரடியாக வருகின்றனர் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) மாகாணத்தின் பிரிமியர் டொமினிக் பெரோட்டட் தலைமையிலான குழுவினர் வெள்ளிக்கிழமை முதலவ‌ர் பசவராஜ் பொம்மையை சந்தித்தனர். இந்திய பொருளாதார வியூகத்திற்கு ஆஸ்திரேலிய அரசு 280 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது. இந்தியாவின் பொருளாதாரப் பங்கேற்பை அதிகரிக்க இந்த உத்தி உதவும் என்று டொமினிக் கூட்டத்திற்குப் பின்னர் தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய பிரதிநிதிகள் கர்நாடகாவில் உள்ள சைபர் செக்யூரிட்டி பாலிசி மற்றும் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் காட்டினர். பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் ஆஸ்திரேலியா தொடர்ந்து பங்கேற்று வருகிறது, இந்த ஆண்டும் அவ்வாறு செய்யும் என்று அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் முதல்வர் பசவராஜ் பொம்மை பேசுகையில், உலகத் தலைவர்கள் இந்தியப் பயணத்தை புதுதில்லி பயணத்துடன் தொடங்குவது வழக்கம். இப்போது அவர்கள் அனைவரும் நேரடியாக பெங்களூருக்கு வந்து (coming directly to Bangalore) இன்ஃபோசிஸ், விப்ரோ உள்ளிட்ட மற்ற‌ நிறுவனங்களைப் பார்வையிடுகிறார்கள். அறிவே சக்தி என்பதை நிரூபித்துள்ளது. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, ஏரோஸ்பேஸ், மரபியல், கல்வி, சுகாதாரம், மின்சார வாகனங்கள் மற்றும் பிற துறைகளில் கர்நாடகம் முன்னணியில் உள்ளது. முதலீடுகளுக்கு ஏற்ற இடமாக கர்நாடகா உள்ளது.

மாநிலத்தில் நல்ல சாலைகள் (Good roads), பள்ளிகள், சுகாதார வசதிகள் மற்றும் டிஜிட்டல் இணைப்பு மூலம் கிராமப்புறங்களின் நிலைமைகளும் மேம்பட்டு வருகின்றன. அவற்றை மேலும் மேம்படுத்தும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்றார்.

பெங்களூருவில் உள்ள சவால்கள் குறித்து டொமினிக் கேட்டபோது, ​​போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புறநகர் ரயில் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு, மெட்ரோ ரயில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள பகுதிகளில் மெட்ரோ ரயில் சேவை (Metro Rail Service) தொடங்கினால், பெங்களூரில் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறையும் என்று நம்புவதாக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ள ஆஸ்திரேலியவிற்காக தூதர் சாரா கிர்லேவ், மைக்கேல் கவுட்ஸ் ட்ராட்டர், தகவல் தொழில் நுட்பத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர், பிடி டாக்டர் இ வி ரமண ரெட்டி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.