Woman commits suicide: இரட்டை குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

சரளாவிற்கு கடந்த மாதம் குறை மாதத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது

சேலம்: Woman commits suicide by jumping into well : தனது இரட்டை குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தமிழகம் சேலம் மாவட்டம் எடப்பாடி பனங்காடி பகுதியைச் சேர்ந்தவர் சபரீஷ். பஞ்சு தொழில்சாலையில் பணியாற்றி வரும் இவருக்கு, பாலப்பட்டியைச் சேர்ந்த சரளா என்பவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு சர்வேஷ் என்கிற மகன் உள்ளார். இந்த நிலையில் சரளாவிற்கு கடந்த மாதம் குறை மாதத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.

இந்த நிலையில் சனிக்கிழமை காலை பாலப்பட்டியில் தாய் வீட்டில் இருந்த சரளா காணாமல் போயுள்ளார். அங்கம் பக்கம் தேடி பார்த்தும் அவர் கிடைக்காததால், அவரை தொடர்ந்து தேடி வந்தனர். இதனிடையே காணாமல் போன சரளாவின் உடல், வெங்கடேஷ் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் மிதப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அங்கு சென்ற அவரது உ றவினர்கள் சரளாவின் உடலை மீட்டு, எடப்பாடியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சரளாவில் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்தாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்த போலீசார், தீயணைப்பு படையினருடன் வந்து. கிணற்றில் காணாமல் போன இரட்டை குழந்தைகள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து கொங்கணாபுரம் போலீசார் (The Konkanapuram police have registered a case) வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். பிறந்து ஒரு மாதமே ஆன இரட்டை குழந்தைகள் என்பதால் அவர்களின் உடல்களை மீட்பதில்

முதல் கட்ட விசாரணையில் குறை பிரசவத்தில் குழந்தைகள் பிறந்ததால் விரக்தியில் இருந்த சரளா, தனது இரட்டை குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. இரட்டை குழந்தைகளுடன் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளது. அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பவானி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 2 பேர் (2 people caught in the flood) பத்திரமாக மீட்பு

தமிழகம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள நெல்லித்துறையில் பாவனி ஆற்றின் கரையோரம் உள்ள மரத்தின் அருகே, காரமடையைச் சேர்ந்த 23 வயது இளைஞரும், 21 வயது பெண் ஒருவரும் சனிக்கிழமை விளையாடிக் கொண்டிருந்தனராம். அப்போது திடீரென வெள்ளப் பெருக்கு (Flooding)ஏற்பட்டது. இதனால் கரையோரம் விளையாடிக் கொண்டிருந்த அந்த இளைஞரும், பெண்ணும், அருகில் இருந்த மரத்தின் மீது ஏறி, உதவிக்கு குரல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து அந்த ஊரைச் சேர்ந்த பொதுமக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலையடுத்து அங்கு வந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு படையினர், லைப் ஜாக்கெட் (Life jacket) அணிந்து, கயிறு மூலம் ஆற்றைக் கடந்து, பரிசலின் உதவியுடன் ஆற்றின் கரையோரம் இருந்த‌ மரத்தில் சிக்கிக் கொண்டிருந்த இளைஞர், அந்த பெண்ணை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆற்றின் கரையில் இருந்த மரத்தில் இளைஞரும், பெண்ணும் சிக்கிக் கொண்டதாலும், தீயணைப்பு படையினர் அவர்களை ஒரு மணி நேரம் போராடி மீட்டதாலும் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுகிறது. எனவே ஆற்றின் கரையோரங்களுக்கு யாரும் செல்லக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் இளைஞரும், பெண்ணும் ஆற்றின் கரைக்கு சென்றதால் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். எனவே மழை காலங்களில் ஆற்றின் கரைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.