Vehicle toll hike in 20 toll booths : தமிழகத்தின் 20 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் வாகனக் கட்டணம் உயர்வு

சென்னை: Vehicle toll hike in 20 toll booths of Tamil Nadu from midnight today : தமிழகத்தின் 20 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் வாகனங்களுக்கான கட்டணம் உயர்த்தப்படுகிறது.

தேசிய அளவில் 460 க்கும் மேல்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன (There are more than 460 toll booths). தமிழகத்தில் 53 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு ஒரு முறை வாகனங்களுக்கான கட்டணம் உயர்த்தப்படுகிறது. அந்த வகையில், தமிழகத்தில் ஏப். 1 ஆம் தேதி முதல் குறிப்பிட்ட சில சுங்கச்சாவடிகளிலும், செப். 1 ஆம் தேதி முதல் சில சுங்கச்சாவடிகளிலும் வாகனங்கள் வாடிக்கையாக உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள 20 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

விக்கிரவண்டி- திண்டிவனம், உளுந்தூர்பேட்டை (Vikravandi- Tindivanam, Ulundurpet), கொடைரோடு – திண்டுக்கல், புறவழிச்சாலை – சமயநல்லூர், மனவாசி- திருச்சி – கரூர், மேட்டுப்பட்டி – சேலம், உளுந்தூர்பேட்டை, மொரட்டாண்டி – புதுச்சேரி – திண்டிவனம், நத்தக்கரை-சேலம்-உளுந்தூர்பேட்டை, ஓமலூர் – நாமக்கல், தர்மபுரி – கிருஷ்ணகிரி -தும்பிப்பாடி, பொன்னம்பலப்பட்டி- திருச்சி – திண்டுக்கல், புதூர் பாண்டியபுரம் – மதுரை – தூத்துக்குடி, சமயபுரம் – பாடலூர் – திருச்சி, செங்குறிச்சி – உளுந்தூர் பேட்டை – பாடலூர் உள்பட 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது.

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கார், ஜீப், வேன் (Car, Jeep, Van) ஆகியவற்றிற்கு ரூ. 10 கட்டணம் உயர்த்தப்படுகிறது. தற்போது ரூ. 90 வசூலிக்கப்படுகிறது. இனி அங்கு ரூ. 100 வசூலிக்கப்படும். பேருந்து, லாரி போன்ற கனரக வாகனங்களுக்கான கட்டணம் ரூ. 310 இருந்து ரூ. 355 ஆக உயர்த்தப்படும். பள்ளி பேருந்துகளுக்கு மாதாந்திரக் கட்டணம் ரூ. 1 ஆயிரமாகும். உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் மாதத்திற்கு ரூ. 150, 2 மாதங்களுக்கு ரூ. 300 என்ற அதே நிலை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் மட்டுமின்றி, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சுங்கச்சாவடிகளின் கட்டணமும் உயர்த்தப்பட உள்ளதால், பொதுமக்களின் சுமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.