Face mask is mandatory at Chennai airport : சென்னை விமான நிலையத்தில் முககவசம் அணிவது கட்டாயம்

சென்னை: Wearing face mask is mandatory at Chennai airport : சென்னை விமான நிலையத்தில் முக கவசம் அணிவது கட்டாயம் என்று விமானநிலைய ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கரோனா தொற்றின் பாதிப்பை அடுத்து சென்னை விமான நிலையத்தில் (Chennai Airport) முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. பின்னர் கரோனா தொற்றின் பாதிப்பு குறைந்ததையடுத்து, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் சென்னை விமான நிலையத்தில் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து விமான நிலைய ஆணையம் பயணிகளை எச்சரிக்கும் விதமாக ஸ்டிக்கர்களை விமான நிலையத்தின் உள்ளேயும், வெளியேயும் ஓட்டி உள்ளது. அது மட்டுமின்றி, விமான நிலைய ஆணையத்தின் சமூக ஊடகத்திலும் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு இன்னும் முழுமையாக நீங்கவில்லை. இதனால் சென்னை விமான நிலையத்தில் கரோனா பாதுகாப்பு விதிமுறைகள் முழுமையாக அமல்படுத்தப்படுகிறது.

சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள், ஊழியர்கள் அனைவரும் கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும். முகக் கவசம் அணியாமல் வருபவர்களுக்கு விமான நிலையத்திற்குள் அனுமதி இல்லை (Not allowed inside the airport). விமான பயணிகள் அனைவரும் பயண நேரத்திலும் முழுமையாக முகக் கவசம் அணிய வேண்டும். ஒரு சிலருக்கு முககவசம் தொடர்ந்து அணிவதால் பிரச்னை இருந்தால், அவர்கள் அது தொடர்பான அனுமதி பெற்று, முகக்கவசம் அணிவதிலிருந்து விலக்கு பெறலாம். மற்றவர்கள் கட்டயமாக முகக் கவசம் அணிய வேண்டும். முகக் கவசம் அணியாமல் விமான நிலையத்திற்கு வருபவர்கள் மீது கரோனா பாதுகாப்பு சட்டவிதிகளின் படி அபராதம், தண்டனை விதிக்கப்படும்.

எனவே விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு இல்லை என்று மத்திய சுகாதாரத்துறையிடமிருந்து அறிவிப்பு வரும் வரையில் சென்னை விமான நிலையத்தில் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடை பிடிப்பது போன்ற கரோனா விதிமுறைகள் தொடர்ந்து அமலில் இருக்கும் (Corona regulations such as wearing a face mask and maintaining social distance will continue to apply) என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.